MARC காட்சி

Back
பிரகாச மாதா ஆலயம்
245 : _ _ |a பிரகாச மாதா ஆலயம் -
246 : _ _ |a லஸ் சர்ச்
520 : _ _ |a பிரகாச மாதா ஆலயம் சென்னையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இது பொதுவாக உள்ளூர் வட்டத்தில் போர்த்துக்கீசியத்தில் உள்ள பெயரான நோசா சென்ஹோரா டா லஸ் (Nossa Senhora da Luz) என்பதை ஒட்டி லஸ் சர்ச் என்று அழைக்கப்படுகிறது. 1516ஆம் ஆண்டு போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் சென்னையின் மிகப்பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். இதன் அடித்தளம் இந்தியாவில் ஐரோப்பிய கட்டிடங்களில் மிகப் பழமையான ஒன்றாக குறிக்கப்படுகின்றது. இது பதினாறாம் நூற்றாண்டில் தரைவழி மார்க்கமாக கிறித்தவ சமயத்துறவிகள் வந்தடைந்ததையும் குறிக்கிறது. சாந்தோம் தேவாலயத்திற்கு மிக அண்மையில் உள்ளது.
653 : _ _ |a மைலாப்பூர், லஸ், மயிலாப்பூர், சர்ச், தேவாலயம், ரோமன் கத்தோலிக், திருச்சபை, சென்னை, பிரகாச மாதா, காட்டுக்கோயில்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி. 1516
909 : _ _ |a 8
910 : _ _ |a 500 ஆண்டுகள் பழமையானது. சென்னையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். 
914 : _ _ |a 13.0381376
915 : _ _ |a 80.2624077
916 : _ _ |a பிரகாச மாதா
917 : _ _ |a பிரகாச மாதா
918 : _ _ |a பிரகாச மாதா
926 : _ _ |a பிரகாச மாதா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி துவங்கும். 15-ஆம் தேதி முடிவடையும். ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 15 அன்று பிரகாச மாதா விருந்து கொண்டாடப்படுகிறது.
927 : _ _ |a கோயிலின் முகப்பிலேயே கட்டிய ஆண்டு 1517 என்று பொறித்துள்ளனர்.
928 : _ _ |a ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் வழிபாட்டில் உள்ள இந்த பிரகாச மாதா தேவாலயத்தின் சுவர்களில் பிரகாச மாதா, இயேசு, திருத்தூதர்கள் ஆகிய கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன.
929 : _ _ |a பிரகாச மாதாவின் சிற்பம் அமைந்துள்ளது.
930 : _ _ |a 1516 - ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய நாட்டில் உள்ள பிரான்சீஸ்கன் நகரில் அமைக்கப்பட்ட பிரான்சீஸ்கன் மிஷனரியினர், கிறிஸ்துவின் நற்செய்தியை எல்லோருக்கும் தெரிவிக்கும் ஆன்ம வேட்கை கொண்டு பல நாடுகளுக்கும் கடற் பிரயாணம் மேற்கொண்டனர். அவர்களில் சிலர் வங்கக் கடற்பகுதிக்கு வந்து திக்குத் திசை தெரியாமல் பல நாள்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் இரவு மயிலைக் கடற்கரையில் தோன்றிய ஓர் ஒளி அவர்களின் கண்களில் பட்டு, கவனத்தைக் கவர்ந்தது. கப்பலை ஒளி தெரிந்த திசை நோக்கித் திருப்பினார்கள். அங்கேயே சென்று இறங்கவும் தீர்மானித்தார்கள். ஒளியின் திசையில் பயணித்துக் கரையை அடைந்தனர். கீழே இறங்கி. ஒளி வீசும் திசை நோக்கி நடந்தனர். அது உள் நோக்கிச் சென்று கொண்டேயிருந்தது. அவர்கள் பின் தொடர்ந்து சென்றனர். ஒளி காட்டிற்குள் வழிகாட்டிக் கொண்டே சென்றது. காட்டின் ஒரு அடர்ந்த பகுதிக்கு வந்ததும் ஒளி திடீரென மறைய அவர்கள் அங்கே தங்கி விட்டனர்.ஒளியாக வந்து வழிகாட்டியது மாதாதான் என்பது அவர்கள் நம்பிக்கை. எனவே ஒளி மறைந்த அந்த இடத்திலேயே ஓர் தேவாலயத்தை எழுப்பினர். 'பிரகாச மாதா' என்று பெயரிட்டனர். காட்டுக்குள்ளேயே கோயில் அமைந்திருந்ததால் மக்கள் அதைக் 'காட்டுக்கோயில்' என்று அழைக்கத் தொடங்கினர். குடியேற்றம் அதிகரித்துக் காடு அழிந்து போய்ப் பரபரப்பான நகரின் முக்கிய பகுதியான பின்பும் 'காட்டுக்கோயில்' என்ற பெயர் மட்டும் மாறாமலிருக்கிறது.
932 : _ _ |a பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பியக் கட்டிடத்தில் கோதிக் வளைவுகளும் பரோக்கிய அலங்காரங்களும் காணப்படுகின்றன.
933 : _ _ |a ரோமன் கத்தோலிக்க திருச்சபை
934 : _ _ |a சாந்தோம் தேவாலயம், கபாலீசுவரர் கோயில், முண்டகக்கண்ணியம்மன் கோயில்
935 : _ _ |a மயிலாப்பூர் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சாந்தோம் தேவாலயத்தின் அருகில் அமைந்துள்ளது.
937 : _ _ |a மயிலாப்பூர்
938 : _ _ |a மயிலாப்பூர்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a சென்னை மாநகர விடுதிகள், மயிலாப்பூர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000128
barcode : TVA_TEM_000128
book category : கிறித்துவம்
cover images TVA_TEM_000128/TVA_TEM_000128_மயிலாப்பூர்_மாதாக்-கோயில்-0003.jpg :
Primary File :

TVA_TEM_000128/TVA_TEM_000128_மயிலாப்பூர்_மாதாக்-கோயில்-0002.jpg

TVA_TEM_000128/TVA_TEM_000128_மயிலாப்பூர்_மாதாக்-கோயில்-0003.jpg

TVA_TEM_000128/TVA_TEM_000128_மயிலாப்பூர்_மாதாக்-கோயில்-0001.jpg